Wikipedia

Search results

Saturday, 2 May 2020

இன்று

இன்று (மே-2 ) பல்துறை வித்தகர் பிறந்த தினம்-
விஞ்ஞானி, ஓவியர், பொறியாளர், சிற்பி, இசையமைப்பு, இராசயனவாதி, உடற்கூறியல் நிபுணர், வானியல், பௌதீகம், கருவிகள் வடிவமைப்பு, எழுத்தாளர் என பல்வேறு திறமைகளை கொண்ட ஒருவர் 1452- ல் இத்தாலியில் பிறந்தார். "லியோனோர்டோ டாவின்சி"- எனப்படும் மனிதர்தாம் அவர். மோனாலிசா- என்ற உலகப்புகழ் பெற்ற ஓவியத்தை படைத்தவர் இவர்தாம். இவரின் சிறப்புகள் ஏராளம். இவர் தனது கண்டுபிடிப்புகளை 13000- பக்கங்களில் எழுதி வைத்திருந்தார். அவரது காலத்திற்குப் பிறகே இது வெளியே வந்தது.
1) மனித உடலை அறுத்துப் பார்த்து பாகங்களை படமாக வரைந்தார்.
2) மனித உடல் பற்றி 240- படங்களை வரைந்து, மருத்துவ நூல் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
3) பெருந்தமனி வீக்கம், கல்லீரல் நோய் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
4) நவீன கருவிகள்,பறக்கும் எந்திரங்கள், கார், ஹெலிகாப்டர் போன்றவைகளை குறிப்பிட்டிருந்தார். இவற்றில் பல கருவிகளை தற்போது உருவாக்கிய போது, சிறப்பாக இயங்கியது.
5) பீரங்கி, மண் தூக்கும் எந்திரங்களின் மாடல்கள் வரையப்பட்டிருந்தன.
6) வானத்தின் நீல நிறம் பற்றி விளக்கினார்.
7) காண்டாக்டு லென்சு பற்றி குறிப்பிட்டுள்ளார்.
8) பாறை அமைப்பு, நீர்ச்சுழி, புவியியல் பற்றி எழுதியுள்ளார்.
9) பாலங்கள், கட்டிடம் பற்றிய புதிய வடிவமைப்பு பற்றிய கண்டு பிடிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.
10) தாவரங்களின் இயக்கம் பற்றிய படங்கள் வரைந்துள்ளார்.
11) விலங்குகளின் உள் உறுப்புகளை வரைந்து விளக்கியுள்ளார்.
12) சிக்கலான சில கருவிகளை வரைந்து செயல் முறையை குறிப்பிட்டுள்ளார்.
13) இவர்வரைந்த "கடைசி விருந்து " ஓவியம் சிறப்பு வாய்ந்தது.
14) இவர் உலகப் புகழ் வாய்ந்த " மோனோலிசா"- ஓவியத்தை வரைந்தார். 1503- 06 என நான்கு ஆண்டுகளாக இதை வரைந்தார். நாம் எந்த திசையிலிருந்து இந்த ஓவியத்தைப் பார்த்தாலும் அதன் கண்கள் நம்மையே பார்க்கும் வகையில் இந்த ஓவியம் வரையப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். இந்த ஓவியம் பாரிஸ் நகரிலுள்ள லூவர் மியூசியத்தில் உள்ளது.
15) கம்ப்யூட்டர் மேதை பில்கேட்ஸ் இவரது குறிப்புகளிலிருந்து கம்ப்யூட்டருக்கு தேவையான நுட்ப முறை ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினார்.
16) டாவின்சி இடது கை பழக்கம் கொண்டவர்.
17) ஒரே நேரத்தில் இடது கையால் எழுதவும், வலது கையால் வரையக் கூடிய திறமையும் கொண்டவர்.
18) டாவின்சிக்கு முறையான பள்ளிப் படிப்பு கிடையாது.
இவரது நினைவு தினம் இன்றைய. (மே -2) ஆகும் (2- 5- 1519).



பட விளக்கம்.
1- லியோனோர்டா டாவின்சி
2- மோனோலிசா ஓவியம்
3- டாவின்சி வரைந்த மனித ஓவியம்



No comments:

Post a Comment